இது தொற்று நோய். மைக்கோ பாக்டீரியம் டூபர் குளோசிஸ் (Mycobacterium tuberculosis) என்ற பாக்டீரியா கிருமி காரணமாகப் பரவுகிறது.  காசநோய்க்கிருமி முதலில் நுரையீரலில் நுழைந்து பின்னர் ரத்தத்தில் கலக்கிறது. நோய்க் கிருமி உடலில் நுழைந்து உடலில் பலவீனமடையும்போது தாக்குவதற்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும்.

தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் இக்கிருமி தாக்கும். மூளைக் காய்ச்சல், மூளைக் கட்டி, கைகால் மூட்டு இணைப்புகளில் கட்டி, கண்பார்வை பாதிப்பு, தோலில் ஆறாமல் தொடர்ந்து இருக்கும் புண்கள், சிறுநீரகத்தில் கட்டி போன்ற இடங்களில் காசநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள்:

மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து இருமல், மாலையில் லேசான காய்ச்சல், எடை குறைவு, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவை காசநோயின் அறிகுறிகளாகும்.

எப்போதாவது இருமும்போது ரத்தம் வெளியேறும் வாய்ப்பும் உண்டு. காச நோய்க் கிருமி தாக்கும். உடல் உறுப்பைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுபடும். இது பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் தாக்குகிறது.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, கண்டங்கத்திரி, வில்வம், அத்தி, அருகம்புல், துளசி, தும்பை, குப்பை மேனி, கீழாநெல்லி, தூதுவளை, நெல்லி ஆகிய மூலிகைகள் அனைத்தையும் எடுத்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாகக் கலந்து காற்று புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதிலிருந்து ஒன்னரை டீஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகக் காலை பகல் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ளவும். இதை சுமார் ஆறு மாதங்கள் வரை உட்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மாதத்திலேயே இந்நோயின் தன்மைகள் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். 